Juli 27, 2024

மாவீரர்நாள் பின்லாந்து!!

மாவீரர்நாள் பின்லாந்து!! தமிழீழ தாயக விடுதலையை நெஞ்சிலே சுமந்து களமாடி, வீரகாவியமான எம்மினிய மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் மகோன்னதமான நாள் நவம்பர் 27 மாவீரர்நாள். இம்முறை வழமைபோல கலைநிகழ்வுகளோடு இணைத்து மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்த முடியாத துர்ப்பாக்கியமான சூழல் நிலவுகின்றது. எனவே நாமும் பின்லாந்தின் சுகாதார அமைச்சின் அறுவுறுத்தலுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி , மட்டுப்படுத்தப் பட்ட அடிப்படையான நிகழ்வுகளோடு , மாவீரர்நாள் நிகழ்வுகளை நடாத்த உத்தேசித்துள்ளோம். மாவீரர்நாள் தொடர்பான மேலதிக விபரங்களை, அடுத்தசில தினங்களில் ;பின்லாந்து மாவீரர் பணிமனை “ தெரிவிக்கும். இடம்;Tapanilan Työväentalo, Sompiontie 4, 00730 Helsinki