Februar 29, 2024

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 595பேர் உயிரிழப்பு!


கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 50ஆயிரத்து365பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,595பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் 12இலட்சத்து 56ஆயிரத்து 725பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 219பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது