Oktober 8, 2024

தடுப்பூசி அறிவிப்பு! குமுறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பே வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறி்த்து ருவிட்டரில் அவர் பதிவிடுகையில்:-

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சியினர் தடுப்பூசி மூலமாக நான் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய அறிவிப்பு 5 நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது.

எனக்கு பதில் ஜோ பைடன் அதிபராக இருந்திருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் ஆனாலும் தடுப்பூசி கிடைத்திருக்காது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் இவ்வளவு விரைவாக தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து இருக்காது. அதிகாரத்துவம் கோடிக்கணக்கான உயிர்களை அழித்திருக்கும்.

பைசரும், மற்ற நிறுவனங்களும் தேர்தலுக்கு பிறகு மட்டுமே தடுப்பூசி வெற்றியை அறிவிப்பார்கள் என்று நான் நீண்ட காலமாக கூறி வந்தது தற்போது நடந்துள்ளது.

ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு அதை அறிவிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. அதேபோல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் உயிர்களை காப்பாற்றுவதற்காக இதை முன்னரே அறிவித்திருக்கவேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.