சிறையிலிருந்து நேரடியாக மட்டக்களப்பு அபிவிருத்தி?

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இம்முறை சிறையிலிருந்து திட்டமிடப்படவுள்ளது. அதற்கேதுவாக ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கினைப்பு குழுவின் இணைத் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் பங்கேற்பதற்காக நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தார்.

அதற்கான அனுமதி நேற்று நீதிமன்றத்தில் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதித்தால் பங்கேற்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதையடுத்து இன்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கான காரியாலம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.