September 16, 2024

கொரோனா!! இலங்கையில் 36 ஆக மரணம்!

இலங்கையில் கொவிட்19 மரண எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.கந்தானையைச் சேர்ந்த நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த 84 வயதான பெண் ஒருவர் கொவிட்-நியூமோனியா காரணமாக உயிரிழந்தார் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த அவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.