September 11, 2024

குழம்பியடிக்கின்றது கொழும்பு?

கொழும்பு ஒருவார ஊரடங்கின் பின்னராக இன்று திறக்கப்பட்ட நிலையில் உரிய திட்டமிடலின்றி குழப்பகரமான சூழல் நிலவியது.

புறக்கோட்டை மனிங் சந்தைக்கு இன்று அதிகாலை பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி உள்ளிட்ட பொருள்களுடன் வருகைத் தந்தவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இன்று குறித்த சந்தை திறக்கப்படாமையால், வெல்லவாய, நுவரெலியா, பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்தும் தமது உற்பத்தி பொருள்களுடன் வருகைத் தந்தவர்களேஇவ்வாறு அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனளர்.

அத்துடன், சுமார் 100 லொறிகளும் பொருள்கள் ஏற்றிய நிலையில், மனிங் சந்தைக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தமது லொறிகளைக் கொண்டுச் செல்லுமாறு, இவர்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.