மேள தாளங்கள் முழங்க தமிழகத்தில் கமல ஹாரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபருக்கான வேட்பாளராக களமிறங்கிய 56 வயதான கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் , இவர்  ஒரு இந்திய தாய் மற்றும் ஜமைக்காவின் தந்தையின் மகள், இருவரும் அமெரிக்காவிற்கு கல்வி கற்க குடிபெயர்ந்திருந்தார்.இந்நிலையி அவரின் வெற்றியை இந்தியர்கள் அதிகளவில் கொண்டடி வருகின்றார்கள் , அதிலும் விசேடமாக அவரின் பூர்விகமான தமிழகம் மன்னார்குடியில்  துலசேந்திரபுரம் எனும் இடத்தில் மேள தாளங்கள் முழங்க இனிப்புக்கள் கொடுத்து கோவிலில் சிறப்பு பூசைகளுடன் அப்பிரதேசா மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது.