தீவிரமாக பரவும் கொரோனா ! 1 கோடியே 70 லட்சம் கீரிகள் அழிக்க டென்மார் அரசு முடிவு!

டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன நிலையில் இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றதுஇந்நிலையில், மிங்க் வகை கீரியிடம் கொரோனா பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள கீரி வளர்ப்பு பண்ணையில் வேலை செய்பவர்கள், அவர்கள் தொடர்புடையவர்கள் என 214 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களுக்கு எவ்வாறு கொரோனா பரவியது என நடத்திய ஆராய்ச்சியில் பண்ணையில் வளர்க்கப்பட்ட மிங்க் கீரிகள் மூலமாக வைரஸ் பரவியது என கண்டறியப்பட்டுள்ளது.
மிங்க் மூலம் பரவிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மற்றவர்களை போல இல்லாமல் வைரசின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இது கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதையடுத்து, டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 1 கோடியே 70 லட்சம் மிங்க் வகை கீரிகளை அழிக்க அந்நாட்டு பிரதமர் மீடி ஃப்ரிடெர்கிசன் உத்தரவிட்டுள்ளார்.