தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோதப்போகை கண்டித்து, நாகையில் இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துடன் நாகை துணை மின்நிலையம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கடந்த ஆண்டு 20 சதவீதம் வழங்கியதை போலவே இந்த ஆண்டும் வழங்க வேண்டும் எனவும், முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.