வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை ?

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கல்வி திணைக்களத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னரும் மாணிக்கவாசகர் நதீபன் எனும் குறித்த பணியாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக மோசடி செய்துள்ளார்.

இதேவேளை குறித்த பெண் உத்தியோகத்தரிற்கு திருமணம் செய்து வைத்துள்ளதுடன் அவரது கணவருக்கு வர்த்தக நிலையமொன்றை அமைத்து வழங்கியமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

கார் மற்றும் வசதிகளை கொண்டு இராஜபோக வாழ்வில் வாழ்ந்தமையும் அம்பலமாகியுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாணப் பணிப்பாளர் , கணக்காளர் வலயப் பணிப்பாளர் உள்ளிட்ட 12 பேரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

இதனை திரிபுடுத்தி அவர்களை கூட்டு களவாணிகள் என பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வடமாகாண அதிகாரிகளிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் சுமார் மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரிய வந்ததையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் முறைப்பாட்டை செய்திருந்தார்.அத்துடன்  ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதேநேரம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , பணிப்பாளர் , கணக்காளர் ஆகியோருடன் வலயந்தின் கல்விப் பணிப்பாளர் , கணக்காளர் என கணக்கிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.