September 9, 2024

மறப்போமா எங்கள் மாவீரரை…!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்
கார்த்திகை 27.

மறப்போமா எங்கள் மாவீரரை
மனம் நோகுதையா என்ன வேதனை
கலங்காத கண்கள் காணக்கூடுமோ
கண்கள் கலங்காத உறவை பார்க்கக்கூடுமோ…

கார்த்திகை நன்னாளில்
கண்விளித்திருங்கள் கல்லறையில் விளக்கேற்ற கணப்பொழுதில்
நாம் வாருவோம் ….
பெற்றோரும் உற்றாரும் ஊர் கூடி
உமை வணங்க உறங்காது விழித்திருங்கள் உறுதியோடு
நாம் வருவோம் …..

கார்த்திகைப்பெருநாளில்
காந்தள் மலர் பூத்திருக்கு
கண்மணிகள் கல்லறையில்
காணிக்கையாக காத்திருக்கு …
செல்வங்களே மாவீரச்செல்வங்களே
உங்கள் கல்லறை மீதிலே
நெய்விளக்கேற்றிட கணப்பொழுதில்
நாம் வருவோம் …

உங்களை நினைவு கூர
விளக்கேற்றி உங்களை வணங்க
பெற்றோருக்கு உரிமை உண்டு… அதை
தடுத்திடும் உரிமை மறுத்திடும் கொடுமை யாருக்கும் என்றும் இல்லை…
அணைபோட்டுத்தடுத்தாலும்
பேரலையாய் தடைஉடைத்து விளக்கேற்ற நாம் வாருவோம் …

அனைத்து மாவீரர்களுக்கும்
எமது வீரவணக்கம்.

ஈசன் சரண்