September 11, 2024

காதினுள் கேட்கிறது புத்தஞ்சரணங் கச்சாமி?

படத்தில் உள்ள பௌத்த கோயில் அமைந்திருப்பது.தமிழர்களின் வவுனியா வடக்கில் உள்ள மிக பழமையான எல்லைக்கிராமங்களில் ஒன்றான கச்சல்சமணங்குளம் என்னும் கிராமமாகும்.

நடு காட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த விகாரை கடந்த 2018க்கு பின்னர் சில பௌத்த துறவிகளினால் குறித்த தொல்லியல் சிதைவுகள் காணப்படும் இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர்.

இங்கு கொக்கஞ்சாங்குளம் (போகஸ்வெவ) கிராமம் மற்றும் அயல் கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள் 2018க்கு பின்னர் அங்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

குறித்த ஆலயம் மற்றும் அங்குள்ள(கச்சல்சமணங்குளம் பெயர் மாற்றி சப்புமல்தன்ன)விகாரைக்கு „சப்புமல்கஷ்கட“ எனும் பெயரும் சூட்டப்பட்டிருக்கின்றது.

காட்டுக்குள் பல கட்டிடங்கள் புதிது புதிதாக கட்டப்பட்டிருக்கின்றது.

இங்கு தொல்லியல் திணைக்களத்தின் தலையீடு இல்லை,பொலிஸாரின் தலையீடு இல்லை,வனவளத்திணைக்களத்தின் தலையீடு இல்லை.