September 11, 2024

இரண்டு வயது குழந்தையையும் விட்டுவைக்கவில்லை?

அனுராதபுரம் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை வெலிசறை கடற்படை வீரர் செப்ரெம்பர்- 28 ஆம் திகதி இவருக்கு கொரோ தொற்று உறுதிசெய்யப்பட்டு புனானை கொரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர்.

இந்நிலையில் அவரது (30 வயது) மனைவி மற்றும் குழந்தை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுத்தில் இந்த குழந்தையுடன் 8 ஆவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளது.

இதனிடையே

கொழும்பு லேடி ரிஜ்வே Lady Ridgeway சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
எனினும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்து வருவதாக இயக்குனர் மேலும் தெரிவித்தார்.