இணக்க அரசியல்: சையனைட் குப்பியை மறந்த முன்னணி?

கொரோனா தொற்றலை கிடப்பில் போட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த அமைச்சர் மட்ட கூட்டத்தில் ராஜாங்க அமைச்சரும்

மலையக தளபதி என்று அவரது ஆதரவாளர்களால் விளிக்கப்படுபவருமான ஜீவன் தொண்டமானை பின்வரிசையில் அமரவைத்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனிடையே அவருக்கு முன்வரிசையில் ஓர் ராஜாங்க அமைச்சர் அமர்ந்திருக்க இன்னொருபுறம் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனும் அமர்ந்திருந்தார்.

இதனிடையே ஜீவன் தொண்டமான் அமர்ந்திருக்கின்ற வரிசையில் தான் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரது அல்லக்கையும் அமர்ந்திருந்ததாக  ஜீவன் தொண்டமான் ஆதரவாளர்கள் சீறி சினக்கின்றனர்.

இதனிடையே அடைந்தால் தமிழீழம் இல்லாவிடின் சையனைட் குப்பி புகழ் கஜேந்திரர்கள் டக்ளஸ் தலைமை தாங்கும் கூட்டத்தில் பவ்வியமாக அமர்ந்து அமைதியாக எழுந்து சென்று புதிய இணக்க அரசியல் சித்தாந்தத்தை வெளியிட்டனர்.

அதேவேளை கொரோனாவென முடங்கியிருக்கின்ற முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதல் கூட்டமைப்பினர் ஈறாக ஒரேவரிசையில் அமர்ந்து இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக மக்கள் நாள் தோறும் கைது செய்யப்பட அதனை பொருட்படுத்தாது எந்தவித தனிமைப்படுத்தலுமின்றி பெரும் கும்பலொன்று யாழ்.வந்தமை கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.