பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி செல்ல முயன்ற அக்கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர்!

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததை கண்டித்து, திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கைகளில் வேலை ஏந்தியவாறு சாலையில் ஊர்வலமாக பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து

நிறுத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைதுசெய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.