September 9, 2024

கொரோனாவாவது கூந்தலாவது: திருநகரில் கூத்து!

இலங்கை அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யாழ்.மாநகரசபைக்கு

உட்பட்ட திருநகர் கிராமத்தை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.ஆனால் திருநகர் கிராமசேவகர் பிரிவு கொரானா காரணமாக தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அரச நிர்வாகங்களினால் சீல் வைக்கப்பட்டுள்ளபோதும் இரவு நேரத்தில் காவல்துறை மற்றும் படையினருக்கு அல்வா கொடுத்துவிட்டு கிராமத்தில் இருந்து வெளியேறி நல்லூர் அரசடி கிராம சந்தியில் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

அந்த கிராம இளைஞர்கள் பலருடன் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இதில் காணப்படும் இளைஞர்கள் பலர் வாடகை கார், மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் என தெரியவந்துள்ளது.

மக்களின் நலன் கருதி இவர்களை தனிமை படுத்தப்பட்ட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்படுவதுடன் ஏனையோருக்கும் முன்னுதாரணமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.