September 9, 2024

சுமந்திரன் தரப்பிற்கு கைகொடுத்த சைக்கிள்?

மாவை அணியினை முடக்கி சுமந்திரன் அணி மீள் எழுச்சியடைய பகீரதன பிரயத்தனத்தில் குதித்துள்ளது.

நேற்றிரவு யாழ்.நகரிலுள்ள சுமந்திரனின் வீட்டினில் நடைபெற்ற சந்திப்பொன்றில் மாவையும் இணைந்துள்ளார்.ஆயினும் மாவை எதிர்பாராத விதமாக அங்கு சென்றதால் சந்திப்பிலிருந்த சிறீதரன் மற்றும் சாள்ஸ் கையும் களவுமாக அகப்பட்டு கொண்டதாக ஆதரவாளர்களிடையே கதைகள் உலாவுகின்றன.

அண்மைக்காலமாக மாவை அணிக்கு எதிராக உள்ளுராட்சி உறுப்பினர்களை அணிதிரட்டி வந்த சுமந்திரன் அணியை சேர்ந்த சிறிதரன் மற்றும் சாளஸ்; ஆகியோர் சந்திக்கும் இரவு கூட்டம் ஒன்று நேற்றிரவு நடைபெற இருந்ததை அறிந்த மாவை சேனாதிராஜா  நேரடியாகவே அங்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்திருந்ததாக முகநூல் பதிவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சுமந்திரனால் கதிரையேற்றப்பட்ட உள்ளுராட்சி தலைவர்கள் கதிரைகள் ஆடிவருகின்ற நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

21 வாக்குகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  16 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் இடப்பட்டு பருத்தித்துறை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

இன்று  (2) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு  பருத்தித்துறை பிரதேச சபை மண்டபத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 8, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 4, தமிழ் மக்கள் கூட்டணி 2, ஐக்கிய தேசிய கட்சி 1, பொதுஜன பெரமுன கட்சி 1 ஆகிய வாக்குகள் ஆதரவாகவும்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 2, சிறீலங்கா சுதந்திர கட்சி 1 எதிராகவும்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவர் வருகை தராமலும் வாக்குகள் பதியப்பட்டது