September 11, 2024

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதி திறக்கப்பட மாட்டாது ?

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதியில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்

இன்றைய தினம் யாழ் நகரத்தில் கொரோனா விழிப்புணர்வு  வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

கொழும்பிலிருந்து வருகை தந்தவருடன் நேரடியானதொடர்புகளை பேணியதனடிப்படையில் தொற்றுக்குள்ளானரின்  உறவினர்களுக்கு சொந்தமான யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியில் “மயூராபேன்ஸி” மற்றும் அதனோடு தொடர்புடைய நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு ள்ளன .

எனினும் அந்த கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது எனவும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படியே சீல் வைக்கப்பட்ட கடைகளை திறப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.