பிறந்த நாள்:கொழும்பு போன வைத்தியருக்கு கொரோனா?

 

ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தாயாரின் பிறந்தநாளுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கொழும்பைச் சேர்ந்த வைத்தியர் திருகோமணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றிவருகிறார்.

கொழும்பு உட்பட்ட மேல் மாகாணம் முழுமையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியர் கொழும்பில் உள்ள தன்னுடைய தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று திரும்பியிருக்கின்றார்.

அங்கிருந்து வந்த வைத்தியர், வைத்தியசாலை விடுதியில் கொரோனா அறிகுறிகளுடன் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியருடன் தங்கியிருந்த இன்னுமொரு வைத்தியருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வைத்தியருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் அது சமூகத்திற்கு கடும் அச்சுறுத்தலாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.