ஒருவார முடக்கம்;மறுத்த கோத்தா?

ஒரு வாரத்திற்கு நாட்டை முழுவதுமாக மூடுவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நடந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.

இந்நிலையில் மேல் மாகாணம் மற்றும் பல பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் முடிந்தவரை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்