இலங்கையில்:67ஆயிரமாம்!

இலங்கையில்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, தற்போது 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹன தெரிவித்தார்.

இதில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சுமார் 25,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

மேலும் தெரிவித்த  ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹன, தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.