Mai 2, 2024

உணவுக்கு தட்டுப்பாடு:ஊழையிடுகிறது நரி!

இலங்கை  30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளப் போகிறது எனவும் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதி பெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது வியூகங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்நும் குறிப்பிட்டார்

பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்தும் எச்சரித்தார்.

நிதி அமைச்சின் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விரைவான நிதி முன்முயற்சி உதவியை கோரியபோதும்  இலங்கை அத்தகைய தொகுப்புக்கு தகுதியற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

“இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடையும். அதற்கு மேல் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. 30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால், அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளப் போகிறது. நாம் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறோம்“ என்றார்.

மேலும் நிலையான வைப்புத் தொகைகளில் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு மற்றும் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு குறைந்தது 59 சதவீதம் குறையும் என்று சுட்டிக்காட்டினார்.

30 வயது நிரம்பிய ஒருவர் இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் ஓய்வு பெறவிருக்கும் ஒரு நபர் எப்படி நிலைமையை சமாளிக்க முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.

2020 இல் இந்த பொருளாதார நெருக்கடி பற்றி தாம் எச்சரித்தாகவும் 2021 இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்றும் தாங்கள் கூறியதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான எமது வியூகங்கள் குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் பிழைப்புக்கான புதிய திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert