Mai 1, 2024

அரசாங்கம் வ- மா-மானியமுறையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும் மு- – உ- சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் இவை சார்ந்த கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழுகின்ற ஒரு லட்சத்திற்கு அதிகமான அதிகமான குடும்பங்கள் வருமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

சீர் அற்ற காலநிலையாலும் இரசாயன உரம் இன்மையாலும் விவசாயிகள் நெல் விழைவு இல்லாது கடனாளிகளாகவும் சட்டவிரோத மீன்பிடி காரணமாகவும் எரிபொருள்(மண்ணெண்ணை) விலை ஏற்றம் காரணமாகவும் மீனவர்கள் வருமானம் இழந்துள்ளனர். இதனால் இத் தொழில்கள் சார்ந்த கூலித் தொழிலாளர்களும் வருமானம் இழந்துள்ளனர்.

ஆகவே வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீட்டு நிதி வழங்கப்படாத நிலையில் மானிய அடிப்படையிலாவது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி , கோதுமை மா , சீனி, மண்ணெண்ணை வழங்க ஐனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் மாவட்ட செயலாளர்களும் அரசாங்கத்தின் கவனத்திற்கு விரைந்து கொண்டு செல்ல வேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert