Mai 2, 2024

உக்ரைனுக்கு ஒரு செய்தியை அனுப்ப ரஷ்யா – பெலாரஸ் போர் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு போரின் விளைவுகள் குறித்து காட்டுவதற்கும், ரஷ்யாவின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பெரலாசில் 10 நாட்கள் ‚அலைட் ரிசால்வ்‘ இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா தொடங்கவுள்ளது.

சுமார் 30,000 ரஷ்யாவின் படையினர் மற்றும் இராணுவ தளபாடங்கள் பெலாரஸ் நாட்டுக்குள் கடந்த ஜனவரி நடுப்பகுதியில் வரத்தொடங்கியது.

தரையிலிருந்து வான்வெளியைப் பாதுகாக்கும் எஸ்-400 எனப்படும் வான்வழி ஏவுகணை அமைப்புக்களின் 2 பட்டாலியன்கள் மற்றும் 12 சுகோய் Su-35 போர் விமானங்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

பனிப்போருக்குப் பிறகு பெலாரஸுக்கு இது மிகப்பெரிய அளவில் ரஷ்யா படைகளை அனுப்பிய பயிற்சி எடுப்பது என நேட்டோ கூறியுள்ளது.

மேலும் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் இராணுவ வன்பொருள்களை உக்ரைனின் எல்லைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் குவித்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் இந்த பயிற்சிகள் உண்மையான தாக்குதலுக்கு, அல்லது பெலாரஷ்ய எல்லைக்கு தெற்கே 150கிமீ தொலைவில் உள்ள தலைநகர் கெய்வைக் கைப்பற்றும் முயற்சிக்கு புகை திரையாகப் பயன்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளன.

2014 இல் உக்ரைனின் பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதற்கு சற்று முன்பு ஒரு அறிவிக்கப்படாத ரஷ்ய இராணுவப் பயிற்சி நடைபெற்றது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert