Mai 19, 2024

டக்ளஸ் உடன் பேச தமிழக முதல்வர் பின்னடிப்பு!

இந்திய மீனவர்கள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் மோதல் விவகாரத்தில் டக்ளஸ் தரப்புடன் பேச தமிழக முதலமைச்சர் பின்னடித்துவருகின்றார்.

ஏற்கனவே கே.சிவாஜிலிங்கம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்து தோல்வி கண்டிருந்த நிலையில் தற்போது கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கும் திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார். 

எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில்  இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொறோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு  தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தகவல்களை கசியவிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert