April 26, 2024

ஐக்கிய மக்கள் சக்தி பிளவு:ஆலோசனையில் சரத்

ஐக்கிய மக்கள் சக்தி பிளவினை கண்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் செய்த தவறுகளை இனங்கண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பயணத்தில் ஈடுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் அதே பழைய பாரம்பரிய அரசியல் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது.

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் டொலரின் பெறுமதி சுமார் 30 ரூபாவால் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டின் வறுமையை நோக்கிய பயணத்துக்கு முன்னாள் அரசாங்கமும் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க் கட்சிகள் நிலைமையைப் புரிந்து கொண்டு பின்னடைவுகளை சரிசெய்து கொண்டு முன்னேற வேண்டும். இந்த விடயங்களைத் தீர்க்காமல் அரசாங் கத்தை அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தேவையான மாற்றங்களைச் செய்யாமல் அரசாங்கம் அமைக்கப்படு மானால், ஐந்து வருடங்களில் அரசாங்கம் கவிழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் திறமையால் நாட்டில் எந்த ஓர் அரசாங்கமும் கவிழவில்லை என்றும், அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert