ஷங்கரை மிஞ்சும் தமிழில் இன்னோர் பிரமாண்டம்.! ஒரு படம் எடுக்க 5 வருஷம்.! சிவகார்த்திகேயன், சூர்யா
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட திரைப்படங்களை சமூக கருத்தோடு இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்க ஆரம்பித்தால் குறைந்தது 2 வருடம் ஆகும். அந்தளவுக்கு கால நேரம் எடுத்துக்கொள்வார். தனக்கு தேவையான காட்சி வரும் வரை மெனெக்கெடுவார். தற்போது அதே போல ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவில் உருவெடுத்து வருகிறார். அவர் வேறுயாருமல்ல, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் தான். அப்படம் முடிந்து சில காலம் எடுத்துக்கொண்டு அயலான் படத்தினை சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து தொடங்கினார்.
பிரமாண்ட பட்ஜெட், ஏ.ஆர்.ரகுமான் இசை, வேற்று கிரக வாசி கதைக்களம் என அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கே வருடங்கள் தாண்டி வேலை செய்து வருகிறார். இன்னும் பணிகள் முடிந்த பாடில்லை. அந்தளவுக்கு காட்சி சரியாக வரவேண்டும் என மெனெக்கெடுகிறார். அதற்கடுத்து, ரவிக்குமார், சூர்யாவிடம் கதை கூறியுள்ளாரம். அந்த கதை 50 வருடம் கழித்து வருங்கால உலகத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். சூர்யாவிற்கு அந்த கதை பிடித்துவிட்டதாம். அதற்கான முன் பணிகள் மட்டுமே 1 வருடம் நடக்குமாம். போகிற போக்கை பார்த்தல் ஷங்கரை மிஞ்சும் பிரமாண்டத்தை ரவிக்குமார் படங்களில் பார்க்கலாம் என தோன்றுகிறது. அதற்கு பதில் அயலான் திரைப்படம் தான் கூற வேண்டும்.