ஆளும் – எதிர்தரப்பு சமரம்?

ஆளும் – எதிர்தரப்பு சமரசத்தையடுத்து பிரதி சபாநாயகர் தேர்விற்கான பலப்பரீட்சை கைவிடப்பட்டுள்ளது

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு சமகி ஜன பலவேகயவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன போட்டியின்றி தெரிவு செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ, தான் இந்தப் பதவிக்கு போட்டியிடப் போவதாக முன்னர் தெரிவித்திருந்தார். அப்படியானால், துணை சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

எவ்வாறாயினும், இன்று (17) பாராளுமன்றத்தில் தேர்தல் எதுவும் நடைபெறாது எனவும், ரோகினி கவிரத்ன போட்டியின்றி உரிய பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.