Mai 4, 2024

ஜந்து கோடி பணப்பொதி:பிந்தியவர்களிற்கும் சலுகை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது.

இதனிடையே வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வெளிவந்துள்ளது.

கூட்டமைப்பின்; மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜபுத்திரன் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்காக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ஐந்து கோடி ரூபா நிதி, ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இராஜவரோதயம் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தவராசா கலையரசன் ஆகியோர், காலம் தாழ்த்தி தமது கோரி;க்கை முன்மொழிவுகளை அனுப்பிவைத்ததால் அவர்களுக்கான ஒதுக்கீடுகளை அனுமதிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கட்சி தலைமையின் அனுமதியின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நிதி பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் ஜக்கிய மக்கள் சக்தியில் எழுந்துள்ள போதும் தமிழ் கட்சி தலைமைகள் அத்தகைய புகார்களை தெரிவித்திருக்கவில்லை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert