Mai 3, 2024

டக்ளஸ்:பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்!

ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் செயற்படுவதால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா விலக்கி முன்மாதிரியாக செயற்படவேண்டுமென ஜனநாயகப்போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் கருத்து தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ தனிநாட்டுக்கான ஆயுதவழிப்போராட்டத்தை கைவிட்டு தற்போது ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளனர்

இந்நிலையில் இத்தகைய சூழலைக்கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா விலக்கிக்கொள்வதன் மூலம் மேற்குலக நாடுகளும் அத்தகைய முடிவை எடுக்க தூண்டுதலாக அமையவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.

ஈழத்தமிழ் மக்கள் இந்தியாவின் நலன்சார்ந்தே இன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவும் ஈழத்தமிழர் தொடர்பில் தனது அக்கறையினை செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை தேசிய தலைவர் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா போன்ற கைக்கூலிகள் கருத்துக்களை தெரிவிக்க எந்தவித அருகதையுமற்றவர்கள்.சுயநல அரசியல் சார்ந்து செயற்படும் டக்ளஸ் போன்றவர்கள் இவ்வாறான மோசமான கருத்துக்களிற்காக அரசியல் தாண்டி மோசமான பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவருமெனவும் ஜனநாயக போராளிகள் கட்சி எச்சரித்துள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert