Mai 3, 2024

உக்ரைன் பதற்றம்: அணு ஆயுதப் பயிற்சிகளை பார்வையிகிறார் புட்டின்

உக்ரைன் – ரஷ்ய எல்லையில் 150,000 படைகளை ரஷ்யா குவித்துள்ளதால் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கப் போவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியதோடு பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில் அணுசக்தி படைகளின்  பாரிய பயிற்சிகளை செய்யவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஏவுவதன் மூலம் படைகளின் மூலோபயப் பயிற்சிகளை ரஷ்ய அதிபர் மேற்பார்வையிவார் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது

இப்பயிற்சிகளின் நோக்கம் படைகளின் ஆயுத்த நிலையை சோதிப்பது, அணு அணு அல்லாத ஆயுதங்களின் நம்பகத்தன்மையை சோதிப்பது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert