Mai 2, 2024

பேய்க் கிராமம் வெளியே வந்தது!

ஸ்பெயின் – போர்ச்சுக்கல் எல்லையில் ஸ்பெயினின் வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள அசெரிடோ கிராமத்தில் ஆல்டோ லிண்டோசோ நீர்த்தேக்கம்1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கத்தால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கால் அருகில் இருந்த கிராமம் நீரில் மூழ்கியிருந்தது. தற்போது அங்கு வறட்சி ஏற்பட்டதால் மீண்டும் அக்கிரம குடியிருப்புகள் மக்கள் பார்வைக்கு வெளித்தெரிய வந்துள்ளது.

அப்பகுதி சேற்றுக்கள் நடத்தபோது சரிந்த கூரைகள், செங்கற்கள், மரக்குப்பைகள், கதவுகள், பீர் போத்தல்கள், துருப்பிடித்த மகிழுந்து என பல பொருட்கள் இருப்பதை பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். அத்துடன் அப்பகுதிக்கு முன்னர் வழங்கப்பட்ட நீர் விநியோக குழாயிலிருந்து குடி நீர் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எலும்புக்கூடுகள் போன்று வீடுகள், கட்டிடங்கள் சாம்பல் இடிபாடுகளுடன் காட்சி தருகின்றன. இதனால் அக்கிராமம் பேய்க்கிராம் என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. அத்துடன் அக்கிராமம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert