Mai 9, 2024

நள்ளிரவு பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களை சந்தித்த மணிவண்ணன்..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக சூழலில் பதற்றமான நிலையேற்பட்டது.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை சட்டத்தரணியும் யாழ்.மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் நேரில் பார்வையிட்டிருந்தார்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பல்கலைக்கழக சூழலில் இருந்த தம்மை பொலிஸார் கைது செய்யதுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தமைக்காகவே தாம் கைது செய்துள்ளதாக பொலாஸார் கூறியதாக கூறியுள்ள மணிவண்ணன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாக கூறினார்.