யாழில் மற்றுமொரு நோய்த்தொற்று உருவாகும் நிலைமை, மக்களுக்கு எச்சரிக்கை…!

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார்.

தற்பொழுது பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் காலத்தில் எமது பிரதேசத்தில் உண்ணிக் காய்ச்சல் என்ற ஒருவித பக்டீரியா காய்ச்சலுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

அதிகமாக வயல் வேலை செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.