நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய் எரிகின்றது.
கருவறையில் கருத்தரித்து பிஞ்சா , பூவா என்று முகமலர முன்னே கருகியது கருவறை
நெஞ்சம் துடிக்கின்றது,நெருப்பாய் எரிகின்றது.
முற்றத்தில் பூத்தமரம் மொட்டுக்கள்
பல மலரும் முன்னே அடியோடு கருகியகதை சொல்லவா.
ஆறமுடிவில்லை,அன்னியன் கொடுமையை.
எம் மண் இரத்த ஆறாய் மாறியது ஏன், நாம் செய்த பாவமா, நம் முன்னோர் செய்த பாவமா,
இரத்தக்கறை எம்மண்ணிண் மடி ,
இந்த வலியை மறக்குமா எம்நெஞ்சம், மன்னிக்குமா
இவ் பெரும்துயரம் கலைந்து கானலாக போவதற்கு அது ஒன்றும்
கனவல்ல ,எம் இனத்தின் ஒவ்வொரு இதயங்களிலும் வீறு கொண்டு நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கும்
வடுக்கள், வலிகள் ,தாங்குமா நெஞ்சம்,
நாம் சுவாசிக்கும் காற்றுக்கூட நமக்கு நஞ்சானது.உணர்வுகளை
சுமந்து சென்ற உயிரும் ஊனம்
தெரியாமல் கருகியது.
கணக்கின்றது இதயம் , கண்ணீர்
சொரிய, தாங்க முடியவில்லை
நம்தேசம் பட்ட துயரம்.
அன்று நாம் இட்ட கூக்குரல் அகமது
கடவுளுக்குத்தன்னும் கேட்கவில்லை. எல்லா கடவுளையும்
கூப்பிட்டோம்,தினம் தினம் எரிகின்றது நெஞ்சம்.
கதறி அழுகின்றோம், கல்லறைவரை
தேடுகின்றோம்,
நம்மோடு பிறந்தவர்கள் எங்கே
நம்மோடு படித்தவர்கள் எங்கே
நம்மோடு விளையாடியவர்கள் எங்கே
நம்மோடு ஒன்றாக இருந்து உணவு அருந்தியவர்கள் எங்கே
கூறியவார்த்தைகள் எங்கே
இவையாவும் அரக்கனின் அக்கினியில் பொசிந்தது ஏன்
இவர்கள் கூப்பிடும் குரல் கேட்கின்றதா,
நெஞ்சம் துடிக்கின்றது, நெருப்பாய்
எரிகின்றது.
பிணத்தை உடையதாயின் மார்பில்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை.
வாயில் சாப்பாட்டுடன் தலை மடியும்
குழந்தை, மலத்தை கழிக்கும் கணத்தில் கணலாய் எரியும் உடல்,
நம் பாரினில் இப்படியும்ஒரு வலி
தாங்கிய வரலாறு,
ஐயோ சொல்லி அழ சோகம் தீர்ந்திடுமோ
நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய்
எரிகின்றது,
நெஞ்சு துடிக்கின்றது நெருப்பாய்
எரிகின்றது.
ஆக்கம் உதயா கனடா