Mai 1, 2024

இலங்கையின் மின்சாரக்கதை!

இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு மட்டும்   929 மில்லியன் நட்டமடைந்து இருந்தது . இதை ஈடு  செய்யும் வகையில் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது 

ஆனால் 40 இற்கு மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் தங்களின்  மின்சார கட்டணத்தை இதுவரை செலுத்த வில்லை 

அவர்களில் 

மகிந்த ராஜபக்ச ரூபா  722,216.77  

 ரிஷாட் பதுதீன் ரூபா  970,128.82 

 தயாசிறி ஜயசேகர ரூபா 637,448.38 

கே.டி.எம்.  பண்டார ரூபா  856,561.01 

 ஆர். எம்.சி.பி ரத்நாயக்க ரூபா 731,405.13 

பி ஹாரிசன் ரூபா 577,415.12 

டக்லஸ் தேவானந்தா ரூபா  22,000,000.00

ஹெகலிய ரம்புக்கெல ரூபா 7,000,000 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர   அங்கயன் இராமநாதன் அவர்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மின்சாரக் கட்டண நிலுவை  27 இலட்சம் கூட கடந்த ஆண்டு வரை செலுத்தப்பட்டு இருக்க வில்லை 

இது போதாதென்று ஜனாதிபதி அவர்களின் செயலாளரின் உத்தியோகபூர்வமான வதிவிடத்தின் 527,755.94 ரூபா பெறுமதியான மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை 

அதே போன்று பிரதம மந்திரி அவர்களின் முதன்மை செயலாளர் பயன்படுத்தும் வதிவிடத்தின் 1,114,127.28 பெறுமதியான மின்சாரப்பட்டியல் செலுத்த பட வேண்டி இருக்கின்றது 

முப்படையினருக்கு சொந்தமான அலுவலகங்கள் முதல் பொலிஸ் அதிகாரிகளின் வதிவிடங்கள் உட்பட இடங்களில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை 

‚இன்ஸ்பெக்டர்‘ தர பொலிஸ் அதிகாரி ஒருவர் மட்டும் (ரெஸ்ட் ஹவுஸ் ரோடு, குளியாப்பிட்டிய முகவரி) 2.4 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டி இருக்கின்றது 

அதேபோல  பல பிரபல தனியார் நிறுவனங்களும் தங்கள் மின்சார பாவனைக்கு உரிய கட்டணங்களை செலுத்துவதில்லை 

அடிப்படை கட்டமைப்பு மாற்றங்களை செய்யாமல் வெறும் கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு மூலம் மட்டுமே அரச வருமானத்தை அதிகரித்து செலவுகளை ஈடு செய்ய முடியாது 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert