April 27, 2024

கடவுச்சீட்டு இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைய குரோசியாவை ஏற்றுக்கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்

எல்லையற்ற ஐரோப்பாக்குள் கடவுச்சீட்டு இல்லாத மண்டலத்தில் குரோஷியா நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்தபிறகு 2023 ஆண்டு புதுவருடத்தன்று ஐரோப்பிய ஒன்றிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. 

இது 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் உறுப்பினர்களைச் சுற்றி சுதந்திரமாகச் செல்ல உதவுகிறது.

1990களில் சுதந்திரப் போரில் ஈடுபட்ட 3.9 மில்லியன் மக்களைக் கொண்ட முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான குரோஷியா, 2013 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நேரத்தில், உணவு மற்றும் எரிபொருள் விலைகளை உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில் யூரோவை ஏற்றுக்கொள்வது குரோஷியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குரோசியாவுக்கு விசா எடுத்துக்கொண்டால் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையலாம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert