April 28, 2024

ஜனாதிபதி மாளிகைக்கு ரணில் வருகிறார்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் நாளை திங்கட்கிழமை தனது பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக உள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்

போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜூலை 9 அன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.

“கோட்டை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது, மேலும் குற்றவியல் அதிகாரிகள் (SOCO) மற்றும் சிறப்பு கைரேகை புலனாய்வு அதிகாரிகள் மூலம் தடயவியல் சான்றுகள் ஜனாதிபதி செயலகத்தில் சேகரிக்கப்படும்” என்றுபொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert