ஜெனீவா வரை சென்று தரகர் வேலை பார்த்த டக்ளஸ்?

ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்தான் அவர் என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன்.

சிங்கள பகுதியில் ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார். தேர்தல் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச் பிரதமராக வர இருக்கின்றார். அவ்வாறு இருக்கக் கூடிய அரசு எவ்வாறு இருக்கும் என்பது எல்லோருக்கும் வெளிப்படும். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இளைஞர், யுவதிகள் காணாமலாக்கப்பட்டார்கள். இன்று அதே ஆட்சி மீண்டும் வருகின்றது.
கோட்டாபாய ராஜபக்ச தான் முழுக்க முழுக்க சிங்கள வாக்குகளாளே தெரிவு செய்யப்பட்டவன் என்பதை தெளிவாக கூறியிருக்கின்றார். ஆகவேஇ அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது வெளிப்படையானது.
இந்த தேர்தலில் களமிறங்கி இருப்பவர்கள் தமிழ் மக்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவார்களா? சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவார்களா? அது பற்றிப் பேசுவார்களா? அமைச்சர்களாக வந்தால் தடுத்து நிறுத்துவார்களா? கடந்த காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது அரசாங்கம் என்னவெல்லாம் செய்தார்களளோ அதற்கு ஆமாம் சாமி போட்டார்களே தவிர
டக்ளஸ் தேவானந்தா ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றுதான் பேசினார். பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர் அவர். நாங்கள் நம்பி வாக்களித்த கூட்டமைப்பினரும் இன்று தமது கொள்கைகளில் இருந்து விலகி இன்று அவர்களும் அமைச்சர்களாவதற்கு தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள் எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.