ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.
2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ புலனாய்வு  பிரிவினருடாக கோத்தாவால்கையாளப்படுபவர்கள் என பதிவு அம்பலப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய தூதர வட்டாரங்களுடன் தொடர்பை கொண்டுள்ள  இக்கும்பல் திருமலைஇரா.சம்பந்தருக்கு எதிராக களமிறங்கியுள்ள ரூபனை தோற்கடிக்க முழு அளவில் களமிறங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே   அண்மையில் வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற சிறிய குண்டுவெடிப்பின் பி;ன்னணியில் இத்தரப்புக்களே இருந்ததாக சிங்கள ஊடகமொன்றே செய்தியும் வெளியிட்டிருந்தது.