Mai 3, 2024

மக்கள் வீடுகளில் முடங்குவதை தவிர்க்க வேண்டும்! விஞ்ஞானிகள் ஆலோசனை

 

புற ஊதாக் கதிர்கள் 90% கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் என்று வைராலஜிஸ்ட்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

புற ஊதாக் கதிர்கள் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சளி, இருமல் துளிகளில் உள்ள கொரோனா வைரசை அழிக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படுவதால் கோடைக்காலத்துக்குள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நோய்த் தொற்று பரவல் குறித்த பயத்தைப் போக்கும் விதமாக, சளி – இருமல் துளி ஆகியவற்றின் புறப்பரப்புகளில் உள்ள 90 % கொரோனா வைரசை சூரியக் கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்கள் அழிக்கும் என்று ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்ட வைராலஜிஸ்ட் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.