April 28, 2024

அமெரிக்காவின் சதியை முறியடிக்க ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்காவின் சதியை முறியடிக்க ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான் மீதான தடையை நீடிக்கவும் வலுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒரு கடினமான வழியை எடுத்து வருகிறது, அதன் நடவடிக்கை மத்திய கிழக்கில் மோதல்களைத் தூண்டவும் ஆயுதங்களை வாங்கவும் தெஹ்ரானை அனுமதிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆறு வல்லரசு நாடுகளுடனான தெஹ்ரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தம் ஒக்டோபரில் நிறைவுக்கு வரும் நிலையில் ஆயுதத் தடையை விதிக்க வொஷிங்டனின் உந்துதலை எதிர்ப்பதற்கு ஈரான் இன்று ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி, அமெரிக்கர்கள் ஏற்கனவே கோபமாக உள்ளனர். வருத்தப்படுகிறார்கள், இந்த பிரச்சினையை பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். ஐ.நா சபையின் நான்கு நிரந்தர உறுப்பினர்கள் அமெரிக்காவுடன் நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அமெரிக்காவின் சதியை ரஷ்யாவும் சீனாவும் எதிர்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா வெற்றிபெறாது. பொருளாதாரத் தடைகளின் கீழ் கூட நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.