April 26, 2024

மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்த ஆறுமுகன் தொண்டமான் குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!

மலையகத்தில் விகாரைகளை அகற்ற வேண்டுமென ஆறுமுகன் தொண்டமான் நஞ்சை விதைக்கவில்லை. மலையகத்தில் இரத்த ஆறு ஓடாமல் பாதுகாத்தவர் அவர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரிகைகள் நேற்று நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றிய போதே மகிந்த இதனை தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டார். ஆறுமுகனின் மறைவு தொடர்பாக தனது அனுதாபத்தை நாட்டு மக்களிற்கும், குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு கூறினார்.

அப்போது ஆறுமுகன் பற்றி குறிப்பிடும்போது, அவர் இந்தியாவின் நண்பர் என்றார். அதுபோல பல சர்வதேச நாட்டு தலைவர்கள் தமது இரங்கலை தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

தொண்டமான் என்பது மலையக மக்கள் மத்தியில் மரமும் மரப்பட்டையும் போல பிணைந்து வாழ்பவர்கள். மக்களுடன் இணைந்த வாழ்வு அவர்களது. ஆறுமுகனின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் நாம் அனைவரும் நன்கறிந்த ஒருவர்.

அந்தக்காலத்தில் தொழில் அமைச்சர் என்ற ரீதியில், தோட்ட தொழிலாளர் விவகாரத்தில் பல முறை பேச்சு நடத்தியுள்ளேன்.

தொண்டமான் குடும்பம் அரசியலை குறுகிய நோக்கமாக பார்க்கவில்லை. அவர்கள் மக்களிற்கு சேவை செய்தனர். அரசாங்கம் என்பது நம் அனைவரதும் அரசாங்கம் என்ற ரீதியில் செயற்பட்டவர்கள்.

2005 இல் ஆறுமுகன் தொண்டமான் எமது அரசுடன் இணைந்து கொண்டவர். அதேபோன்று சௌமியமூர்த்தி தொண்டமாக மலையக மக்களின் பிரஜாவுரிமை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுத்தார்.

அதேபோன்று மலையக மக்களிற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆறுமுகனிடம் கையளித்து விட்டு சென்றார்.

2006 காலகட்டத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பாதைகள், பாடசாலைகள், வீட்டு வசதிகள் செய்யப்பட்டன.

கடந்த காலங்களில் தொட்ட தொழிலாளர்களால் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டது. அந்த போராட்டம் இணையதளம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது.

1940இல் முல்லோயா தோட்டத்தில கோவிந்தன் என்ற தொழிலாளி நடத்திய போராட்டத்தை விட, இளைஞர்களின் போராட்டம் முன்னேற்றமடைந்திருந்தது.

மலையக மக்களின் இந்தளவு முன்னேற்றத்திற்கு ஆறுமுகனே பாதையமைத்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராளுமன்றத்திற்கு சென்று, அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகளையும், நாட்டுக்கு எதிராக உலகளவில் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்களிற்கு உதவியளித்தே பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றனர்.

எனினும், தொண்டமான் பரம்பரையினர் தொண்டமான் பொய் நியாயங்களை கூறி மக்களை ஏமாற்றியவர்களல்ல.

அதனால்தான் மமலையகத்தில் இரத்த ஆறு ஓடவில்லை. மக்களிற்கு அளப்பரிய சேவை செய்ய அவர்களால் முடிந்தது.

ஆறுமுகன் தொண்டமான் பரம்பரையினர் தமது பிரதேசத்தில் மத வழிபாட்டு தலங்களை பிரச்சனையாக்கவில்லை.

அவற்றை தமது பகுதியிலிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் மத்தியில் நஞ்சைவிதைக்கவில்லை. மலையக பகுதி விகாரைகளிற்கு நிதி வழங்கினார். அதனால் மக்கள் மத்தியில் நிற்கும் தலைவரானார்.

மலையகமக்களிற்காகவே தம்மை அர்ப்பணித்து, மக்களிற்காகவே வாழ்ந்தவர்கள்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்உயிர் பிரிந்தாலும், அவரது பிரார்த்தனைகளை எம்மிடம் கையளித்து விட்டே சென்றுள்ளார்.

அவர் மரணிக்கும் தினத்தில் என்னை சந்தித்து பேச்சு நடத்திய அனைத்து விடயங்களையும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.