இலங்கை நாடாளுமன்றில் 7வது?
கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கையின் மற்றொரு இராஜாங்க அமைச்சரான அருந்திக்க பெர்னான்டோவும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அண்மையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.