Mai 19, 2024

பேரம் முடிந்தது:தமிழர் தாயகம் இந்தியாவிற்கு விற்கப்பட்டது!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள வளமுள்ள பிரதேசங்களை இந்தியா கையாள்வதற்குரிய வசதிகளுக்கான வாக்குறுதிகளை நேரடியாகவே வழங்கியுள்ளார் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் 

இதன் பின்னரே இலங்கைக்கு ஒரு பில்லியன் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புதுடில்லியும் கொழும்பும் செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தாலும் முழுமையான விபரங்கள் அதில் இல்லை. 

ஆனாலும் டில்லி உயர்மட்டத் தகவல்கள் சில விடயங்களைக் கசிய விட்டிருக்கின்றன. 

ஆகவே ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஐ வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்குக் கையளித்த கடிதத்தின் அறிவுறுத்தல் அரசியல் (Instruction politics) இப்போது பலருக்கும் புரிந்திருக்கும். 

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இரவு மக்களுக்கு வழங்கிய தனது உரையில் அது பற்றிக் கூறியிருந்தார். 

ஆனால் பசில் ராஜபச்சவுடன் உரையாடிய பின்னர், இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிகள் மற்றும் வழங்கவுள்ள நிதியுதவிகளுக்கான பேச்சுக்களின் அணுகுமுறையை நோக்கினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பது போன்றதொரு தன்மையைக் காண முடிகின்றது. 

இலங்கையிடம் இருந்து இந்தியா உத்தரவாதங்களைப் பெற்றிருக்கின்றதே தவிர இலங்கைக்கு நிபந்தனைகள் எதனையும் விதித்ததாகத் தெரியவில்லை. இந்தியத் திட்டங்களுக்கு இலங்கை அனுமதியளித்துள்ளது.  

பௌத்த மற்றும் ராமாயண சுற்றுலாக்களை கூட்டாக ஊக்குவிப்பது உட்பட, இருதரப்பு சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் மோடி இந்த ஒப்பந்தத்தின் பின்னர் வெளியிட்டிருக்கிறார் எனவும் அரசியல் ஆய்வாளர்கருத்து வெளியிட்டுள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert