Mai 4, 2024

ஜேர்மனி – உக்ரைன் இராஜதந்திர முறுகல்! கடற்படைத் தளபதி பதவி விலகினார்!!

உக்ரைன் – ரஷய் விவகாரம் தனது கருத்தை வெளியிட்ட ஜேர்மனி கடற்டைத் தளபதி பதவி விலகியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா குறித்து அவர்தெரிவித்த கருத்துக்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஒன்லைனில் பரவலாக பகிரப்பட்டன.

2014ல் ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியன் தீபகற்பத்தை உக்ரைன் ஒருபோதும் மீட்காது என வைஸ் அட்மிரல் கே-அச்சிம் ஷான்பாக் வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்த போது கூறினார். 

இவரது தவறான கருத்தை அடுத்து நேற்று சனிக்கிழமை ஜேர்மனியின் படையினரின் பெயர் கெட்டுப்போதவை தடுக்க விரும்பவதால் அவர் பதவி விலகுவதாக அட்மிரல் கே-அச்சிம் ஷோன்பாக்  குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதவி விலகல் கடிதத்தை ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொண்டதாகவும் தனக்கு துணையாக இருந்த துணை அட்மிரலாக இருந்தவர் தற்காலிகமாக ஜேர்மனிக் கடற்படையின் தளபதியாக நியமித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் ஜேர்மன் தூதரை வரவழைத்து, ஜேர்மன் கடற்படைத் தலைவர் கருத்து தெரிவித்த வீடியோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

ஷ்யா உக்ரைனின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்ற கருத்தை ஒரு அபத்தம் என்று விவரித்தார். 

ரஷ்ய அதிபர் புடின் விரும்புவது மதிக்கப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடந்த கூட்டத்தில் ஷோபாக் கூறினார்.

புட்டின் விரும்பும் மரியாதையை அவருக்கு வழங்குவது எளிதானது. மேலும் அவர் தகுதியுடையவர் என்று கடற்படைத் தளபதி மேலும் கூறினார்,

இவரது கருத்து ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. உக்ரேனுக்கு ரஷ்யாவின் இராணுவ அச்சுறுத்தல் பிரச்சினையில் அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஐக்கியப்பட வேண்டும் என்று ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மாஸ்கோ அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக ஏதேனும் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டால் அதற்கு அதிக விலை கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஆனால் பல நேட்டோ நாடுகளைப் போலல்லாமல், உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்று ஜேர்மனி கூறுகிறது. மேலும் பதட்டங்களைத் தூண்ட விரும்பவில்லை என்று வாதிடுகிறது. அந்த நிலைப்பாடு நெருக்கடியை தணிக்க உதவாது என்று ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

ஜேர்மனியின் நிலைப்பாடு கிய்வ் உடனான இராஜதந்திர சண்டையைத் தூண்டியது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஜேர்மனி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert