April 27, 2024

நிலா (லண்டன்) என்னால் 23/06/21 அன்று அ- க- மே- பே- அனுப்பிவைத்த கடிதம் !

அனைவருக்கும் வணக்கம்.

புதிதாக உருவாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட வரலாற்று பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சையானது கடந்த நான்கு மாதங்களாக தொடர்கின்ற நிலையில், குறித்த வரலாற்று பாடத்திட்டத்தில் உள்ள தவறுகளை தாம் மாற்றியமைக்கின்றோம் என்கின்ற வாக்குறுதிகள் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முக்கிய நபர்களால் வழங்கப்பட்டபோதும் அந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் கால வீணடிப்பு செய்யப்படுகின்ற நிலையை ஈழத்தமிழ்ப்பெண்ணாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குறித்த இந்த வரலாற்று பாடத்திட்டத்தில் தவறு உள்ளதாக இந்தப்புத்தகமானது அச்சடிக்கப்படுவதற்கு முன்னராகவே என்னால் பிரித்தானியாவில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினர்களாக உள்ள சிலருக்கு எழுத்து மூலமான கடிதம் வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது .
மேற்குறித்த கடிதத்தை அந்த உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றே நான் கருதுகின்றேன். இந்த கடித புறந்தள்ளல் என்பது நடவடிக்கையென்பது, ஈழத்தமிழினத்தின் வரலாற்றை புறம்தள்ளுகின்ற நடவடிக்கையா? அல்லது குறித்த நிலா என்கின்ற பெண்ணின் கடிதத்தை புறந்தள்ளிய நடவடிக்கையா? என்பது பற்றிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் எனக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் வேண்டுகின்றேன்,

கடந்த வருடம் (2021) 30 ஆம் திகதி ஆனி (06) மாதம் குறித்த இந்த புத்தகத்தை அச்சிட கொடுத்ததாக நம்பத்தகுந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். குறித்த புத்தகம் அச்சிடப்பட்டு வெளிவந்த பின்னர் எனக்குத் தெரிந்து ஆவணி மாதம் இறுதிப் பகுதியில் 2021 ஆம் ஆண்டில் இருந்து, இந்த புத்தகத்தின் வரலாற்று பாடத்திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் ஏலவே தமிழ்பாடசாலையை நடந்துகொண்டிருந்த பிரான்ஸை தலைமையகமாக கொண்டிருந்த குழுவினருக்கும்( தமிழ்பாடசாலை நிர்வாகிகளாலும், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்த முக்கிய கல்வித்துறை நிர்வாக உறுப்பினர்களாலும்) புதிதாக தோற்றம்பெற்ற அணியினருக்கும் இடையிலான முறுகல் மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்தது.

குறித்த இரு குழுவினருக்கும் இடையிலான வியாபார போட்டியின் வெளிப்பாட் டின் எதிரொலியாகவே மேற்குறித்த சண்டைகள் இடம்பெறுகின்றது என பலவேறு மக்கள் கூட்டம் இந்த பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தாலும், ஈழத்தமிழர் வரலாறு என்ற ஒரு பாடத்திட்டத்தை உள்ளடக்கி அந்த வரலாற்றில் தவறான தரவுகளை செருகி தமிழரின் வரலாற்றை மாற்றியமைக்க துணைபோகும் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை துரித கெதியில் வரலாற்று தவறுகளை சீர்படுத்தி சரியான ஈழத்தமிழர் வரலாற்றை புலம்பெயர் தமிழ்ச்சிறார்களுக்கு கற்றுக்கொடுக்கும் சமூகப்பொறுப்பை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்றே நம்புகின்றேன்.
நன்றி

நிலா
11.22
06/01/22
பெரியபிரித்தானியா

என்னால் ஏலவே 23/06/21 அன்று அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையில் இருந்த முக்கிய நபர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி (வாட்ஸ் அப் மூலமாக )

அனைவருக்கும் பணிவான வணக்கம்

இந்தப்பள்ளிக்கூட தகவலுக்குள் இதுநாள்வரையிலும் எந்தவொரு கருத்தையும் நான் போடுவதில்லை . ஏனெனில் இந்தக்குழுவின் நோக்கம் என்னவென்று நான் மிகவும் தெளிவாக அறிந்த நிலையில் இருந்தேன். ஆனாலும் இன்று என் காதுக்கு வந்த செய்தியொன்றானது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்கள் சார்ந்த வரலாறை பாடநூலாக்கிய தாங்கள் தமது பாடசாலை நிர்வாகத்தை சார்ந்தவர்கள் ஈழத்தமிழர் வரலாறை பற்றி தவறான பாடத்திட்டத்தை சோழர் காலத்துடன் ஈழத்தமிழர் வரலாறு உருவாகியுள்ளது போன்றதொரு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது ஈழத்தமிழர்கள் தமது வரலாறை தொலைத்த மக்களாக மாறியுள்ளதை மிகவும் மனவேதனையுடன் பதிவுசெய்கின்றேன்.

ஈழத்தமிழரிடையே உள்ள வரலாற்று பேராசிரியர்கள், தொல்லியல் மரபணுவியல் ஆசிரியர்களின் எண்ணற்ற புத்தகங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்நாட்டில் இருந்து வந்த சில பேராசிரியர்களின் கருத்துக்களை உள்வாங்கி அதுவே ஈழத்தமிழர்கள் வரலாறு என்று ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு கல்வித்திட்டமாக தாங்கள் கொண்டுவர விழைந்திருப்பது சொல்லில் அடங்காத வேதனையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேற்குறித்த தவறுகள் தொடர்பாக தாங்கள் ஒன்றிணைந்து ஆவண செய்வீர்கள் என்றே நான் நம்புகின்றேன்.

தாங்கள் தொடர்புகொள்ளக்கூடிய நபர்கள்

ஈழத்தமிழர்கள் வரலாறு சார்ந்து
பேராசிரியர் பத்மநாதன் (பேராதனை பல்கலைக்கழகம்)
பேராசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகம்
பேராசிரியர் சிற்றம்பலம்
பேராசிரியர் கிருஷ்ணராஜா
பேராசிரியர் ரகுபதி
கலாநிதி டாக்டர் சிவதியாகராஜா (மரபணுவியல் , மருத்துவம், தொல்லியல் )

ஆசிரியர்கள்
மயூரன் அம்பலவாணர் (MA வரலாறு )
தொல்லியல் , ஊடகத்துறை
நூலகர் ந.செல்வராஜா

நன்றி
நிலா
01.43
லண்டன்
23/06/21