Mai 22, 2024

இலங்கை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கம்!

செப்ரெம்பர் 22 (புதன்கிழமை) அதிகாலை 4 மணி முதல்  இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று   போக்குவரத்து இராஜாங்க செயலாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அதிகாரியின் தகவல் படி, பாகிஸ்தான், இலங்கை, ஓமன், பங்களாதேஸ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.