பிரான்ஸ் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையில் ஏற்பட்டுள்ள தளர்வு, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையை தளர்த்துவதாக தேசிய கல்வி அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
கோவிட் -19 தொற்று அப் பிரதேசத்தில் அறிகுறி இருந்தபோதிலும் தேசிய கல்வி அமைச்சகத்தின் இவ் அறிவிப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ் அறிவிப்பால் நிலைமை மேலும் மோசமாகலாம். பொருளாதாரத்தின் பொருட்டு, வாரம் முழுவதும் ஒரே முகமூடியை அணிந்த மாணவர்களை நாங்கள் காண்கிறோம் என ஆசிரியர் ஒருவர் கூறினார்.