Mai 9, 2024

யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது, திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த இ.ஆர்னோல்ட் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவியிழந்தார்.

அதை தொடர்ந்து நடந்த புதிய முதல்வர் தெரிவில், எம்.ஏ.சுமந்திரன் எழுதிய திரைக்கதையில் வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவானார், வி.மணிவண்ணன் இன்று தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.

வி.மணிவண்ணன் தரப்பின் 9 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 1 உறுப்பினர், ஈ.பி.டி.பியின் 11 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழர் தரப்பின் பிரதான கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, வி.மணிவண்ணனை முதல்வராக்க ஈ.பி.டி.பி ஆதரவு தெரிவித்தது.

இதனால், வரவு செலவு திட்டத்தில் ஈ.பி.டி.பி எதிராக வாக்களிக்காது. இதனால் 21 வாக்குகள், மணிவண்ணன் தரப்பிற்கு நிச்சயம் கிடைக்கும்.

இந்த தரப்புக்களை தவிர, எதிரணியில் 23 வாக்குகள் உள்ளன. முதல்வர் தெரிவை போல, இம்முறையும் சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் மறைமுக ஆதரவு வழங்கினால் அல்லது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தால் மாத்திரமே மணிவண்ணன் தரப்பு வெற்றிபெறும், இன்று பிற்பகல் 2 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வி.மணிவண்ணனை நீக்கியது சரி என நீாதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் மணிவண்ணன் பதவி பறிக்கப்படும், இதனைத் தவிர்ப்பதற்காக தற்போதைய சுமந்திரன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெருக்கத்தின் காரணமாக சுமந்திரனின் வேண்டுகோளை அடுத்து வி.மணிவண்ணனை பதவி நீக்கும் விடயத்தை தற்போது கஜேந்திரகுமார் கைவிட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டத்தில் மாவையை துலைக்கும் வரை யாருடனும் கூட்டுச் சேர தயார் என சட்டத்தரணி சயந்தன் நேற்று மாலை முக்கிய பிரமுவர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அண்மைய நாட்களாக மாவை சேனாதிராஜாவை சுமந்திரன் ஆதரவாளர்கள் மிகத் தரக் குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.